Home நாடு எம்எச்17 பேரிடர்: பயணிகளில் மலேசிய தொலைக்காட்சி நடிகை சுபாவும் ஒருவர்!

எம்எச்17 பேரிடர்: பயணிகளில் மலேசிய தொலைக்காட்சி நடிகை சுபாவும் ஒருவர்!

637
0
SHARE
Ad

shubaபெட்டாலிங் ஜெயா, ஜூலை 19 – கிழக்கு உக்ரைனில் விழுந்து நொறுங்கிய எம்எச்17 விமானத்தில், மலேசிய நடிகை சுபா ஜெயா, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அவரது கணவர் பால் கோஸ் மற்றும் அவர்களது இளைய மகள் கீலா ஆகியோர் மூவரும் பலியாகினர்.

மலேசிய உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான ஸ்பானார் ஜெயா, கேடிஸ் 3 மற்றும் சுகமான சுமைகள் மற்றும் மேடை நாடகங்களான ஃபோர்ப்ளே, சார்லிஸ் ஆண்டி, ஹங்க்ரி ஃபார் ஹோப் ஆகிய நிகழ்ச்சிகளில் சுபா நடித்துள்ளார்.

நெதர்லாந்தில் வாழும் தனது கணவரின் தாய், தந்தையிடம் தங்களது இளைய மகளை காண்பித்துவிட்டு விடுமுறை கழிந்து மலேசியா திரும்ப எம்எச்17 விமானத்தில் பயணம் செய்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், சுபா மற்றும் அவரது கணவர், குழந்தை ஆகியோர் இந்த விமானப் பேரிடரில் மரணமடைந்ததை அறிந்த அவரது நண்பர்கள் சுபாவில் பேஸ்புக் பக்கத்தில் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துவருகின்றனர்.