Home அவசியம் படிக்க வேண்டியவை எம்எச்17: பயணிகளின் நகை, பணத்தை சூறையாட தேடி அலையும் மர்ம கும்பல்!

எம்எச்17: பயணிகளின் நகை, பணத்தை சூறையாட தேடி அலையும் மர்ம கும்பல்!

422
0
SHARE
Ad
mh17,

கோலாலம்பூர், ஜூலை 19 – கிழக்கு உக்ரைனில் எம்எச் 17 விமானம் விழுந்து நொறுங்கிக் கிடக்கும் இடத்தில், போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் சில தீவிரவாதிகள் பயணிகளின் உடமைகள், விலையுயர்ந்த பொருட்கள், பணம் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளதாக சில முக்கிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த திருட்டு கும்பல், பயணிகளின் நகைகள், பணம் மற்றும் வங்கி கடன் அட்டைகளை தேடி அலைவதாகவும் கூறப்படுகின்றது.

சிதறிக் கிடக்கும் பயணிகளின் பெட்டிகள் திறக்கப்பட்டு அதிலுள்ள பொருட்கள் வெளியே இழுக்கப்பட்டுள்ளதாகவும் நேரில் கண்டவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.