Home உலகம் ஏர் இந்தியா விமானி எம்எச்17 விமானத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார்!

ஏர் இந்தியா விமானி எம்எச்17 விமானத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார்!

526
0
SHARE
Ad

mh17_-1024x576கோலாலம்பூர்,ஜூலை 21- மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச்17 விமானம் ரேடார் தொடர்பில் இருந்து விலகிய சில நிமிடங்களில், அதற்கு 25 கிலோமீட்டர் அருகாமையில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் விமானி, அதை தொடர்பு கொள்ள முயற்சி செய்ததாக இந்தியாவின் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

உக்ரைன் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த அழைப்பிற்கு எம்எச்17 விமானத்தில் இருந்து எந்த பதிலும் இல்லாததால், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் ஏர் இந்தியா விமானத்தின் விமானியை மாஸ் விமானத்துடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்து பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஒரு விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டால் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பிற விமானங்கள் அந்த விமானத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கூறுவது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வழக்கமாகும்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், எம்எச் 17 பேரிடர் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள், மலேசிய விமானத்தை நேரடி பாதையை எடுக்குமாறு கட்டளையிட்டதை தான் கேட்டதாக ஏர் இந்தியா விமானி கூறியுள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் இவ்வறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.