Home நாடு நிபோங் திபால் தொழிலாளர் கூட்டுறவு பொதுக் கூட்டம்

நிபோங் திபால் தொழிலாளர் கூட்டுறவு பொதுக் கூட்டம்

603
0
SHARE
Ad

flagநிபோங் திபால், பி.ப்.20-  எதிர் வரும், 24.2.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நிபோங் திபால் கலிடோனியா தோட்ட இளைஞர் மன்ற பொது மண்டபத்தில் நிபோங் திபால் வட்டார் தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்க 12 ஆம் ஆண்டு பொது கூட்டம் நடைபெறவுள்ளது.

இப்பொது கூட்டம் வட்டாரத் தலைவர் கோ. பத்மநாதன் தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

காலை 9 மணி சங்கத்தின் அணியில் மன்ற மாணவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி  நடைபெறும்.

#TamilSchoolmychoice

காலை 10.30 மணிக்கு ஆண்டு பொது கூட்டத்தை சங்கத்தின் தேசியத் துணைத் தலைவர் லட்சமணா தொடக்கி வைப்பார்.

சுமார், 200 உறுப்பினர்கள் கலந்துக் கொள்ளவிருக்கும் இந்த  நிகழ்வில் கடந்த ஆண்டு யூபிஎஸ்ஆர் மற்றும் பி.எம்.ஆர் தேர்வில் தேர்ச்சி பெற்ற சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்கிச் சிறப்பிக்கப்படும்.