Home நாடு சன்வே சுங்கச் சாவடியில் வாகனங்கள் மோதி தீ விபத்து!

சன்வே சுங்கச் சாவடியில் வாகனங்கள் மோதி தீ விபத்து!

507
0
SHARE
Ad

Kesas toll fireசுபாங் ஜெயா, ஜூலை 22 – இன்று மாலை சன்வே சாலைவரி சுங்க சாவடியில், ஒரு கனரக வாகனம் மற்றும் இரண்டு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில், அந்த வாகனங்கள் தீ பற்றி எரிந்ததோடு, டாமன்சாரா பூச்சோங் நெடுஞ்சாலையில் பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த விபத்தில் வாகன ஓட்டுநர்கள் காயம் எதுவும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும், சுங்க சாவடியில் இருந்த பெண் லேசான காயங்களுக்கு உள்ளாகி மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் தலைவர் முகமட் சானி ஹாருல் கூறுகையில், “செம்மண் ஏற்றி வந்த கனரக வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து அதே வழியில் சென்ற டொயோட்டோ எஸ்டிமா மற்றும் புரோட்டான் சாகா ஆகிய இரு வாகனங்களின் மீது பலமாக மோதிய பின் தடம் 4 மற்றும் 5 -க்கு இடையிலான தடுப்புச் சுவற்றில் மோதியதில் தீப்பற்றியது” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கொழுந்து விட்டு எரிந்த தீ சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பதட்டம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.