Home அவசியம் படிக்க வேண்டியவை மறுசீரமைப்பிற்குத் தயாராகும் மலேசியா ஏர்லைன்ஸ்! 

மறுசீரமைப்பிற்குத் தயாராகும் மலேசியா ஏர்லைன்ஸ்! 

489
0
SHARE
Ad

mas-airbus-a380கோலாலம்பூர், ஜூலை 23 – மலேசியா ர்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

மலேசியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களுள் ஒன்றாக கருதப்படும் மாஸ் நிறுவனம், கடந்த 5 மாதங்களில் மட்டும் இரு பெரும் விமான பேரிடர்களை சந்தித்துள்ளது. 

எம்எச்370 பேரிடரிடரால் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து எழுவதற்குள், எம்எச்17 மீதான தாக்குதல், அந்நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு பேரிடியாய் இறங்கி உள்ளது.

#TamilSchoolmychoice

அடுத்தடுத்த விமான விபத்துகளால் பாதிக்கப்பட்டுள்ள மாஸ் நிறுவனம் வர்த்தக ரீதியாக மிகச் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் மலேசியா ர்லைன்ஸில் 69 சதவீத பங்குகளை வகிக்கும் ‘கசானா நேசனல்’ (Khazanah Nasional) நிறுவனம், மாஸில் மறுசீரமைப்புப் பணிகளை நடத்துவதற்கு ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகின்றது.

கடந்த மூன்று வருடங்களாக கடும் வர்த்தக பாதிப்புக்கு ஆளாகி இருந்த மாஸ் நிறுவனம், எம்எச்370 விபத்தினால் கடந்த காலாண்டில் கடும் சரிவை சந்தித்தது.இந்நிலையில் எம்எச் 17 பேரிடரினால் அந்நிறுவனத்தின் பங்கு சுமார் 18 சதவீதம் அளவுக்கு கடந்த வாரம் சரிந்தது.

இதனை கருத்தில் கொண்டு கசானா நேசனல், மாஸில் அடிப்படை மறுசீரமைப்பு பணிகளை தொடங்க இருப்பதாக கூறப்படுகின்றது. இதன் பணிகள் 6-12 மாதங்களில் முடிக்க இருப்பதாக அந்நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறும் என்று கூறப்பட்டாலும், கடந்த மாதம் அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரி வெளியிட்டுள்ள தகவலில், “மாஸ் நிறுவனத்தை முழுவதுமாக தனியார் வசம் ஒப்படைக்க முயற்சிகள் நடகின்றன” என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.