Home உலகம் நேபாளத்தில் இந்தியா, சீனாவை இணைக்கும் புதிய பாலம்!

நேபாளத்தில் இந்தியா, சீனாவை இணைக்கும் புதிய பாலம்!

811
0
SHARE
Ad

CHINAகாத்மண்டு, ஜூலை 23 – இந்தியா மற்றும் சீனாவின் அண்டை நாடான நேபாளத்தில் இரு நாடுகளையும் நில வழியாக இணைக்கும் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பாலம் நேபாள நாட்டில் மக்களின் வர்த்தகம் மற்றும் பொது நோக்கத்திற்காக கட்டப்பட்டுள்ளது.

நேபாளத்தில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியால் நிதி ஒதுக்கப்பட்டு, சங்கோசி நதியின் மீது சுமார் 100 மீட்டர் நீளம் கொண்டதாக கர்கோட் பாலம் கட்டப்பட்டது.

mannar-bridgeஇந்த பாலம் கட்டவதற்கு சுமார் 1.8 பில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த பாலத்தின் மூலம் மக்கள் குறுகிய காலத்தில் சீனாவை அடையமுடியும் என கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்த பாலத்தினை திறந்து வைத்த அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிமலேந்திர நிதி கூறுகையில், “இந்த பாலம் கட்டப்பட்டதன் மூலம் நாட்டின் சுற்றுலா வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் விவசாயம் ஆகியவை நல்ல முன்னேற்றத்தை எட்டும்” என்று கூறியுள்ளார்.