Home இந்தியா ஊசலாடும் விஜய்காந்தின் நிலை!

ஊசலாடும் விஜய்காந்தின் நிலை!

637
0
SHARE
Ad

vijayakaanthசென்னை, ஜூலை 25 – சிங்கப்பூரிற்கு சிகிச்சை பெற சென்ற தே.மு.தி.க தலைவர் விஜய்காந்த் எப்போது தாயகம் திரும்புகிறார் என்பது சந்தேகமாகவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவிய பின் , நடிகரும், தே.மு.தி.கா கட்சி தலைவருமான விஜய்காந்த் கடந்த மாதம் 13-ம் தேதி தனது மனைவியுடன் சிங்கப்பூரிற்கு சிகிச்சை பெற சென்றிருந்தார்.

ஆனால் இவரது உடல்நலம் எவ்வாறு உள்ளது, என்ன பிரச்சனை என்பது குறித்து எந்த ஒரு செய்தியும் தற்போது வரை வெளியாகவில்லை.

#TamilSchoolmychoice

vijayakanth-photos-4-largeஇந்நிலையில் நாளை சனிக்கிழமை (26-ம் தேதி) அவர் இந்தியாவிற்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அந்த தகவலும் அதிகார்ப்பூர்மாக இன்னும் உறுதியாகமல் உள்ளது.

இதற்கிடையே அவர் சமீபத்தில் நெஞ்சு எரிச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் அவர் சிகிச்சை பெற சிங்கப்பூரிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடந்து வரும் சட்டசபை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.