Home கலை உலகம் முதலில் ஆர்யா, சிம்பு, விஷாலை திருமணம் செய்யச் சொல்லுங்க – ஜெய் கோபம்!

முதலில் ஆர்யா, சிம்பு, விஷாலை திருமணம் செய்யச் சொல்லுங்க – ஜெய் கோபம்!

670
0
SHARE
Ad

jayசென்னை, ஜூலை 25 – முதலில் ஆர்யா, சிம்பு, விஷாலை திருமணம் செய்யச் சொல்லுங்க. அதற்கு பிறகு என்கிட்ட வந்து இந்த கேள்வியை கேளுங்க என்றார் ஜெய்.  எதனால் அவர் அப்படி சொன்னார்?

இதோ அவரது பேட்டி:

நடிப்பு மட்டும் எனக்கு போதும் என நான் நினைக்கவில்லை. அதனால்தான் கார் பந்தையத்திலும் பங்கேற்று வருகிறேன். இது எனது குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை. ஆனால் எனக்கு இதில் இருந்த ஆர்வத்தை பார்த்து அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

#TamilSchoolmychoice

நஸ்ரியாவுடன் நடித்துள்ள “திருமணம் எனும் நிக்காஹ்” படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் தாமதமானதற்கு பல காரணங்கள் உண்டு. சில சம்பிர்தாய விழாக்களை நிஜத்தில் படமாக்க விரும்பினோம்.

Engeyum Eppothum Movie Actor Jai Stillsஅதற்காக அனுமதி பெற்று காத்திருந்தோம். அந்த விழாக்கள் நடந்தபோது அதை படம் பிடித்தோம்.  அதனால் படம் தாமதமானது. எனக்கு எப்போது திருமணம் என்று கேட்கிறீர்கள்.

இந்த கேள்வியை முதலில் சிம்பு, ஆர்யா, விஷாலிடம் கேளுங்கள். அவர்கள் முதலில் திருமணம் செய்யட்டும். அதற்கு பிறகு நான் செய்கிறேன். இன்னும் நான் சின்ன பையன்தான். திருமணத்துக்கான நேரம் வரும்போது செய்துகொள்வேன் என கோபத்துடன் ஜெய் கூறினார்.