Home உலகம் இலங்கையில் போர் விமானங்களைப் பழுது பார்க்கும் தளம் அமைக்க சீனா முயற்சி!

இலங்கையில் போர் விமானங்களைப் பழுது பார்க்கும் தளம் அமைக்க சீனா முயற்சி!

1175
0
SHARE
Ad

china_flagகொழும்பு, ஜூலை 25 – இலங்கையில் போர் விமானங்களைப் பழுது பார்க்கும் தளம் அமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டிருப்பது, இந்தியா, இலங்கை இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் திரிகோணமலையில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் சீனா, போர் விமானங்களை பழுது பார்க்கும் தளம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு இலங்கை அரசும் அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த விவகாரம் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

அப்போது, அந்த விவகாரம் குறித்து பதில் அளித்துள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ் சீனாவின் முயற்சியை உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் எந்த இடத்தில் அமைப்பது என உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Flag-map-of-sri-lankaசீனாவின் இந்த முயற்சி இலங்கை இந்தியாவின் உறவில் விரிசலை ஏற்படுத்தும் என ரணில் விக்கிரம சிங் கூறியதற்கு, போர் விமானங்களை பழுது பார்க்க ஆகும் பெரும் செலவை குறைக்கவே இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இது பற்றி இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்யை சந்தித்த போது,  அவரிடம் விளக்கியுள்ளதாகவும் பெரிஸ் கூறியுள்ளார்.

1980-களில் திரிகோண மலையில் அமெரிக்கா தளம் அமைக்க முயற்சி செய்தபோது அதனை முறியடித்த இந்தியா, 1987-ம் வெளிநாடுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்ற முக்கிய ஒப்பந்தத்தை இலங்கையுடன் ஏற்படுத்தியது.

இந்நிலையில், இலங்கை அந்த ஒப்பந்தத்தை மீறும் செயல் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சீனாவின் இந்த முயற்சி வரும் காலங்களில் இந்தியாவின் பாதுகாப்பில் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.