Home உலகம் எம்எச்17 பேரிடர்: சடலங்களைக் கைப்பற்றுவது மட்டுமே ஆஸ்திரேலியாவின் நோக்கம்!

எம்எச்17 பேரிடர்: சடலங்களைக் கைப்பற்றுவது மட்டுமே ஆஸ்திரேலியாவின் நோக்கம்!

492
0
SHARE
Ad

Tony Abbotசிட்னி, ஜூலை 30 – உக்ரைனில் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்திற்கு செல்ல அனுமதி வாங்குவது மட்டுமே ஆஸ்திரேலியாவின் நோக்கம் என்றும், மாறாக பொருளாதாரத் தடைகளை சுமத்துவதற்காக அல்ல என்று ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் இன்று கூறியுள்ளார்.

ரஷ்யாவின் பொருளாதாரம், ஆயுதம் மற்றும் எரிசக்தி துறைகளின் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நேற்று பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அறிவித்தன.

ஆனால், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் மீது ஆஸ்திரேலியா ஏற்கனவே சில தடைகளை விதித்துள்ளதால், தற்போது அது போன்ற தடை விதிக்கும் எந்த ஒரு எண்ணமும் இல்லை என்றும் டோனி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து டோனி மேலும் கூறுகையில், “நாங்கள் தடைவிதிக்கவில்லை என்று கூறவில்லை. சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் சில தடைகள் விதிக்கப்படலாம். ஆனால் தற்போது நமது நோக்கம் தடை விதிப்பது அல்ல. இறந்தவர்களின் சடலங்களை உடனடியாக நாட்டுக்கு கொண்டு வருவது தான்” என்று தெரிவித்துள்ளார்.

எம்எச்17 விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில், நேற்று அனைத்துலக விசாரணை அதிகாரிகளை, கிவ் படைகளும், ரஷ்ய ஆதரவு பிரிவினைக்காரர்களும் அனுமதிக்க மறுத்தனர்.

இதுவரை பலியானவர்களில் 200 பேரின் சடலங்கள் மட்டுமே அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. டச்சு மற்றும் ஆஸ்திரேலிய காவல்துறை மீதமுள்ள சடலங்களைக் கைப்பற்ற போராடி வருகின்றனர்.

கடந்த ஜூலை 17 -ம் தேதி, ஆம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச்17 விமானம், கிழக்கு உக்ரைன் அருகே கிளர்ச்சியாளர்களால் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதில் அதில் பயணம் செய்த 298 பேரும் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.