Home தொழில் நுட்பம் கணிப்பொறியின் இயங்குதிறனை தக்க வைத்துக் கொள்ள சில வழிமுறைகள்!

கணிப்பொறியின் இயங்குதிறனை தக்க வைத்துக் கொள்ள சில வழிமுறைகள்!

994
0
SHARE
Ad

defragmentation

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – வேலை பளு அதிகம் இல்லாத தருணங்களில் நன்றாக இயங்கும் நமது கணினிகள், பணி சுமை அதிகம் உள்ள நேரங்களிலும், அவசர காலங்களிலும் தனது இயங்கு திறனை குறைத்துக் கொண்டு நமது பொறுமையை சோதித்து பார்க்கும்.

கணிப்பொறியை பயன்படுத்தும் அனைவரும் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. இதற்கான அடிப்படை காரணங்களும், கணிப்பொறியின் இயங்குதிறனை தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் கீழே காண்போம்:-

#TamilSchoolmychoice

கணிப்பொறியின் இயக்கு திறனில் முக்கிய பங்கு வகிப்பது ‘செயலிகள்’ (Processor) மற்றும் முதன்மை நினைவகமான ‘ரேம்’ (RAM). பழைய கட்டமைப்புகளைக் கொண்ட கணிப்பொறிகளுக்கான செயலிகள் மற்றும் ரேம்கள் குறைந்த இயங்கு திறனை கொண்டதாகவே இருக்கும்.

அவற்றால் தற்போதைய நவீன பயன்பாடுகளின் இயக்கத்தை கட்டுபடுத்துவது கடினம். எனவே செயலிகளின் வேகம் மற்றும் ரேம்களின் திறன்களுக்கு தகுதற்போல் நமது பயன்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டியது கட்டாயம்.

எனினும், அதிக திறன் கொண்ட செயலிகள் குறைந்த இயங்குதிறனில் இயங்கினால் நாம், நமது கணிப்பொறியின் நினைவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பயன்பாடுகளை ‘டிஃப்ராக்மெண்ட்’ (Defragment) செய்வது அவசியம்.

டிஃப்ராக்மெண்ட் என்பது, நமது கணிப்பொறி பல்வேறு இடங்களில் சேகரித்து வைக்கும் நம் தரவுகளையும், துண்டுதுண்டாக இருக்கும் நம் கோப்புகளையும் ஒன்றுக் கொன்று தொடர்புடைய பதிவுகளாக நினைவகத்தில் சேகரித்து வைக்கும் செயலாகும். இதன் மூலம் கணிப்பொறியின் இயக்கு திறன் போதுமான அளவு அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

 

defrag4

நமது கணிப்பொறியை  டிஃப்ராக்மெண்ட் செய்ய, ‘தேடல் பட்டி’ (Search Bar) -ல் Disk Defragmenter என்று தட்டச்சு செய்தோ அல்லது ஸ்டார்ட் பட்டியில் உள்ள All Programs ->Accessories -> System Tools -> Disk Defragmenter என்ற தேர்வை தேர்ந்தெடுததோ செயல்படுத்தலாம்.

பின்னர் திரையில் தோன்றும் Disk Defragmenter பட்டையில் கரண்ட் ஸ்டேடஸ் என்ற பிரிவின் கீழ் உள்ள கணிப்பொறி நினைவாக பிரிவுகளான C:, D: போன்றவற்றை தேர்ந்தெடுத்து ‘டிஃப்ராக்மெண்ட் டிஸ்க்’ (Defragment Disk) என்ற பொத்தானை அழுத்துவதன்  அந்த நினைவாக பிரிவுகளை டிஃப்ராக்மெண்ட் செய்யலாம்.

இந்த டிஃப்ராக்மெண்ட் செயல்முறையை நமது கணினிகளின் செயல்பாடுகளுக்கு தகுந்தாற்போல் வாரம் ஒருமுறையோ அல்லது மாதம் ஒருமுறையோ செய்து கொள்ளலாம். இதற்கான தானியங்கி மெனுவும் Disk Defragmenter தேர்வில் உள்ளது குறிப்பிடத்தக்கது.