Home கலை உலகம் மீண்டும் சிக்ஸ் பேக்கிற்கு மாறிய கதாநாயகர்கள்!

மீண்டும் சிக்ஸ் பேக்கிற்கு மாறிய கதாநாயகர்கள்!

1299
0
SHARE
Ad

bharathசென்னை, ஆகஸ்ட் 1 – கோலிவுட் கதாநாயகர்களிடையே மீண்டும் சிக்ஸ்பேக் (வயிற்றுப் பகுதியில் ஆறு கட்ட தசைகளைக் கொண்ட தோற்றம்) மோகம் அதிகரித்துள்ளது. வாரணம் ஆயிரம் படத்துக்காக நடிகர் சூர்யா சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறினார்.

பின்னர் அயன் படத்திலும் அதைத் தொடர்ந்தார். ஒன்றிரண்டு படங்களிலேயே சிக்ஸ்பேக் மோகம் அவரை விட்டு விலகியது. இதுபற்றி அவர் கூறும்போது, “சிக்ஸ் பேக் உடற்கட்டை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான காரியம்.

suriya-birthday-8தண்ணீர் குடிப்பதில்கூட கட்டுப்பாடாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதை பராமரிக்க முடியாது. மேலும் இது உடல் நலத்துக்கும் கேடானது. எனவே ரசிகர்கள் யாரும் இதை பின்பற்ற வேண்டாம்” என்று கூறி இருந்தார்.

#TamilSchoolmychoice

அடுத்தடுத்து அதிரடி படங்களில் நடித்தாலும் சாதாரண தோற்றங்களிலேயே அவர் நடித்தார். இதையடுத்து வேலையில்லா பட்டதாரி படத்துக்காக தனுஷ் சிக்ஸ்பேக் உடற்கட்டுக்கு மாறினார்.

velai-illa-pattathariஅதை அவர் தொடர்ந்து பராமரிப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பரதேசி படத்தில் நடித்த அதர்வா தற்போது இரும்பு குதிரை படத்தில் நடித்து வருகிறார்.

Actor Atharva Six Packஇப்படத்துக்காக அவர் சிக்ஸ்பேக் உடற்கட்டுக்கு மாற வேண்டும் என்று இயக்குனர் கூறி இருந்தார். இதையடுத்து கடுமையான உடற்பயிற்சி செய்து சிக்ஸ்பேக் உடற்கட்டுக்கு மாறினார். தொடர்ந்து அவர் இந்த உடற்கட்டை பராமரிப்பாரா என்பது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது.