Home அவசியம் படிக்க வேண்டியவை மோடியையும் ஜெயலலிதாவையும் இணைத்து அவதூறு பரப்பிய இலங்கை அரசு இணையதளம்! (காணொளியுடன்)

மோடியையும் ஜெயலலிதாவையும் இணைத்து அவதூறு பரப்பிய இலங்கை அரசு இணையதளம்! (காணொளியுடன்)

641
0
SHARE
Ad

jayalalithaa vs modiகொழும்பு, ஆகஸ்ட் 1 – இலங்கை பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் இழிவுபடுத்தும் வகையில் அவர்களின் புகைப்படத்துடன் அவதூறான கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

இந்திய பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ரீதியாக எழுதும் கடிதங்களை காதல் கடிதமாக சித்தரித்து வெளியாகியுள்ள அந்த கட்டுரையால், இந்திய அளவில் இலங்கைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சக இணையதளத்தின் வாசகர் கடிதம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “அனைத்துலக அளவில் வகுக்கப்பட்டுள்ள கடல் எல்லையை கடந்து, தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் வருவதனால் அவர்கள் மீது இலங்கை கடற்படை தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

#TamilSchoolmychoice

அனைத்துலக அளவில் தடை செய்யப்பட்ட படகுகள் மற்றும் வலைகளை அவர்கள் பயன்படுத்துவதால், தமிழக கடல் பகுதியில் மீன்வளம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதே நடைமுறையை தமிழ மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் செயல்படுத்தி வருவதால் இலங்கையின் மீன்வளமும் பாதிக்கப்படுகின்றது.”

modi_jaya“இதன் நிதர்சனத்தை புரிந்து கொள்ளாமல் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய பிரதமர் மோடிக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.

அவரின் இந்த செயல்பாடுகளினால் அந்த படகுகள் ஜெயலலிதாவிற்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் சொந்தமானதாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது? 1876-ம் ஆண்டு முதலே கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்று ஆங்கிலேய அரசால் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை.

எனினும் தமிழக அரசு, கச்சத்தீவை தங்களுடையதாக்கிக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பிரதமருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி, இலங்கை மீது நடவடிக்கை எடுக்கச் செய்ய ஜெயலலிதா நினைக்கிறார். ஆனால் ஜெயலலிதாவின் தாளங்களுக்கு மோடி அரசு தலை அசைக்காது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கூற்று சரி தவறு என்ற விவாதங்களுக்கு அப்பாற்பட்டு, தமிழக முதல்வர் அதுவும் ஒரு பெண்மணி, இந்திய பிரதமருக்கு அரசியல் ரீதியாக எழுதும் கடிதங்களை, காதல் கடிதங்களாக சித்தரித்து அந்த கட்டுரைக்கு தலைப்பிட்டு இருப்பதும்,

அவற்றிக்கு தகுந்தாற்போல், இரு பெரும் தலைவர்களின் புகைப்படங்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் கேலிச்சித்திரங்களாக சித்தரித்து இருப்பதும் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.