Home வாழ் நலம் நரம்புத்தளர்ச்சியை நீக்கும் மாதுளம் பூ!

நரம்புத்தளர்ச்சியை நீக்கும் மாதுளம் பூ!

821
0
SHARE
Ad

pomegranate,,ஆகஸ்ட் 5 – மாதுளம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மாதுளம் பூக்கள் பலவித நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது.

சளி, இருமல்,மூச்சிரைப்பு, நரம்புத்தளர்ச்சி, உள்ளிட்ட நோய்களுக்கு எளிய மருந்தாக உள்ளது மாதுளம்பூ.

pomegranat,இருமல் போக்கும்:

#TamilSchoolmychoice

மாதுளம் பூ மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை ஒரு வேளைக்கு ஒரு கரண்டி எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடும்.

மாதுளம் பூவை லேசாக தட்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து மூன்று வேளை குடித்து வந்தால் உடனடி பலன் கிடைக்கும்.

pomegranate,ரத்தம் சுத்தமடைய:

தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று சாப்பிட்டு, பால் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமடையும்.

நரம்புத்தளர்ச்சியை நீக்க:

மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும்.

pomegranate_flower_by_nviki89-d3hi6nuரத்த மூலம் குணமாக:

மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து, வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும்.

காலை, மாலை ஒரு தேக்கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

pomegranateசீத பேதி குணமடைய:

ஐந்து மாதுளம் பூக்களை மைய அரைத்து அரை டம்ளர் தயிரில் கலந்து காலை ஒருவேளை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வர சீத பேதி குணமடையும்.