Home அவசியம் படிக்க வேண்டியவை ‘மைந்தன்’ படப்பிடிப்பில் தினம் அடி, உதை, காயம் தான் – ‘புன்னகைப்பூ’ கீதாவுடன் பிரத்தியேக நேர்காணல்

‘மைந்தன்’ படப்பிடிப்பில் தினம் அடி, உதை, காயம் தான் – ‘புன்னகைப்பூ’ கீதாவுடன் பிரத்தியேக நேர்காணல்

1208
0
SHARE
Ad

Mainthan teamகோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – ‘புன்னகைப்பூ’ கீதா…. இந்த பெயர் மலேசியா மட்டுமல்ல, தமிழக திரைத்துறையினர் உட்பட அனைவருக்கும் நன்கு பரீட்சயமான ஒன்று.காரணம் டிஎச்ஆர் வானொலி அறிவிப்பாளராக தனது கலை பயணத்தை தொடங்கியவர், பின்னர் தொலைக்காட்சி அறிவிப்பாளர், விளம்பரங்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பல துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்கள் மனதை கொள்ளை கொண்டார்.

திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்கள் செய்து வந்த கீதா, தற்போது ‘மைந்தன்’ திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆகின்றார்.

அழகும், திறமையும் நிறைந்த கீதா, கதாநாயகியாக நடிக்க சற்று தாமதமாக தான் முடிவெடுத்திருக்கிறார் என்றாலும் கூட, உடல் எடையை பாதியாய் குறைத்து, பார்ப்பதற்கு அழகுப் பதுமையாக கலைத்துறையில் கதாநாயகியாக ஒரு கலக்கு கலக்க தயாராக இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

#TamilSchoolmychoice

காரணம், தமிழகத்தில் விமல் நடிக்கும், ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ என்ற திரைப்படத்திலும் கீதா தான் கதாநாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து தற்போது வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது.

‘மைந்தன்’ படத்தில் நடித்த அனுபவம்:

சரி… இப்படி ‘அம்சமான குலுவாலி’ ஆக இருக்கும் கீதாவிடம், ‘மைந்தன்’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி கேட்டால், “தினமும் படப்பிடிப்பில் அடி, உதை, வெட்டுக்காயம் தான்” என்கிறார் இயல்பாக.

“ஏன் கீதா?” என்றோம் அதிர்ச்சியாக…

“அந்த படத்தில் வரும் கதாப்பாத்திரம் அப்படி தான்… குமரேசன் என்கிட்ட கதை சொல்ல வரும் போது முதலில் நடிக்க மாட்டேன் என்று தான் சொன்னேன். ஆனால் கதையில் எனக்கு சொன்ன கதாப்பாத்திரம் பற்றி கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதான் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்” என்றார்.

அந்த அளவிற்கு ‘மைந்தன்’ திரைப்படத்தில் கீதாவிற்கு சவாலான கதாப்பாத்திரத்தை கொடுத்து 45 நாட்களில் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்திருக்கிறார் இயக்குநர் குமரேசன்.

படத்தில் கீதா தவிர இன்னொரு கதாநாயகியும் இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல… பிரபல மலேசியப் பாடகி டத்தின் ஷைலா நாயர் தான்.

நாளை மலேசியா முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘மைந்தன்’ திரைப்படத்தில் பிரபல வானொலி அறிவிப்பாளர் டிஎச்ஆர் ராகா உதயா, பிரபல பாடகர்களான டார்க்கி, சீஜே, ராபிட் மேக் போன்றவர்களும் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், இதில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் குரலை மட்டும் வானொலி வழியாகவும், திரைப்படங்களில் பாடல்கள் வழியாகவும் ரசித்து வந்த மலேசிய மக்கள், முதல் முறையாக அவர்களை திரையில் நடிகர்களாக காண உள்ளனர் என்பது தான்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து மலேசியக் கலைத்துறைக்கு அடுத்த மைல்கல்லாக இருக்கும் என செல்லியல் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு விடைபெற்றோம்.

-ஃபீனிக்ஸ்தாசன்

‘புன்னகைப்பூ’ கீதாவின் முழுநீள நேர்காணலை கீழே உள்ள இணைப்பின் வழி காணலாம்:-