Home உலகம் பாக்தாத்தில் தொடர் கார் குண்டு வெடிப்பு – 42 பேர் பலி!

பாக்தாத்தில் தொடர் கார் குண்டு வெடிப்பு – 42 பேர் பலி!

600
0
SHARE
Ad

Iraq-Bomb-Blastபாக்தாத், ஆகஸ்ட் 7 – ஈராக்கின் தலைநகரான பாக்தாதில் அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாக்தாத்தில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் மீது சன்னி பிரிவு போராளிகளான ஐஎஸ்ஐஎஸ் பிரிவு தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகி விட்டது.

Mideast-Iraqநாட்டின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள அவர்கள், ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடும் தாக்குதல் நடத்தி பல அப்பாவிகளைக் கொன்று வருகின்றனர்.

#TamilSchoolmychoice

நேற்றும் ஷியா பிரிவு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சதிர் நகரின் சந்தையில் ஐஎஸ்ஐஎஸ் குழுவைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரினை வெடிக்கச் செய்தனர்.

Tamil-இந்த தாக்குதலில் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர். அதே போல் நேற்று இரவு உர் மாவட்டத்தின் முக்கிய பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 10-ம் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பாக்தாத்தில் கார் குண்டுத் தாக்குதல் – 42 பேர் பலி!ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் மொசூல் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கைப்பற்றியதால் தலைநகர் பாக்தாத்தில் தொடர் தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.