Home உலகம் ஆப்பிரிக்காவில் பல பில்லியன் டாலர்கள் வர்த்தகத்தை குறி வைக்கும் அமெரிக்கா!

ஆப்பிரிக்காவில் பல பில்லியன் டாலர்கள் வர்த்தகத்தை குறி வைக்கும் அமெரிக்கா!

381
0
SHARE
Ad

africa-politicalவாஷிங்டன், ஆகஸ்ட் 7 – உலக அளவில் உணவு, பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளில் மிகவும் பின்தங்கி உள்ள ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்காக சுமார் 33 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சியை மேம்படுத்த அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையே உச்சி மாநாடு ஒன்றை வாஷிங்டனில் அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்துள்ளார். மூன்று நாள் நடக்கும் இந்த உச்சி மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

barack_obamaஇது பற்றி ஒபாமா கூறியுள்ளதாவது:- “ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு அமெரிக்கா அதிக முதலீடுகளை மேற்கொள்ள உள்ளது. வெறும் குறுகிய கால முதலீடாக இல்லாமல் பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நீண்ட கால அளவுகளை மேற்கொள்ள உள்ளோம்.

#TamilSchoolmychoice

இதற்காக அமெரிக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து 33 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான திட்டங்களை வகுத்துள்ளன”

“இந்த திட்டங்கள் மூலம் ஆப்பிரிக்க நாடுகளில் வளர்ச்சியையும், அமெரிக்காவில் அதிக வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்த முடியும்” “ஆப்பிரிக்காவில் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் பொழுதெல்லாம் அமெரிக்காவின் வர்த்தகமும் அதிகரிக்கின்றது.

us-map-flagஇதன் மூலம் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான வேலைகள் உருவாக்கப்படுகின்றன. இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்கா, ஆப்பிரிக்கவுடன் எந்தெந்தத் துறைகளில் இணைந்து செயல்படுவது என விவாதிக்க உள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கவே அதிபர் ஒபாமா, இத்தகைய வர்த்தக முதலீட்டை மேற்கொள்ள உள்ளார் என்றும், இதன் மூலம் பல பில்லியன் டாலர்கள் அளவிலான இலாபத்தை அமெரிக்கா ஈட்டும் என்றும் பரவலாக விமர்சனம் செய்யப்படுகின்றது.