கம்பார், ஆகஸ்ட் 7 – கர்பால் சிங்கின் கார் ஓட்டுநர் சி.செல்வத்தின் வழக்கு வரும் செப்டம்பர் 5 -ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை நீதிபதி முகமட் இப்ராகிம் முகமட் குலாம் அறிவித்தார்.
இந்திய குடியுரிமை பெற்றவரான செல்வம் கர்ப்பால் சிங்கிடம் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 17 -ம் தேதி அதிகாலை, அவர் ஓட்டிச் சென்ற கார் விபத்திற்குள்ளானதில், கர்ப்பால் சிங் மற்றும் அவரது உதவியாளர் மைக்கேல் ஆகியோர் மரணமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து செல்வம் கடந்த ஜூலை 9ஆம் தேதி காவல் துறையினரால் கம்பார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் கவனக் குறைவாகவும், ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்டியதற்காக குற்றம் சாட்டப்பட்டார்.
அவர் மீது சாலை போக்குவரத்து 1987 பிரிவு 41 -ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 வருடங்கள் சிறை தண்டனையும், 20,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.