Home கலை உலகம் வரும் 15-ம் தேதி சூர்யாவின் ‘அஞ்சான்’ வெளியீடு!

வரும் 15-ம் தேதி சூர்யாவின் ‘அஞ்சான்’ வெளியீடு!

594
0
SHARE
Ad

Anjaan,சென்னை, ஆகஸ்ட் 7 – சூர்யாவின் மாறுபட்ட தோற்றத்தில் உருவாகியிருக்கும் படம் ‘அஞ்சான்’. இப்படம் வரும் (ஆகஸ்ட்) 15-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் பரோட்டா சூரி, துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜம்வால், மற்றும் இந்தி நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

2படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் முன்னோட்டத்தை (டிரைலர்) இதுவரை 30 இலட்சம் பேர் பாத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice