Home கலை உலகம் கோலாலம்பூரில் ‘அஞ்சான்’ சிறப்புக் காட்சி – சூர்யா, சமந்தா பங்கேற்பு!

கோலாலம்பூரில் ‘அஞ்சான்’ சிறப்புக் காட்சி – சூர்யா, சமந்தா பங்கேற்பு!

895
0
SHARE
Ad

anjaan-2,சென்னை, ஆகஸ்ட் 8 – ‘அஞ்சான்’ படத்தின் சிறப்புக் காட்சி ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு மலேசியத் கோலாலம்பூரில் நடக்கிறது. இந்தக் காட்சியில் படத்தின் நாயகன் சூர்யா உள்பட பலரும் கலந்து கொள்கிறார்கள்.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள முதல் படமான ‘அஞ்சான்’ பெரும் எதிர்ப்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது. இந்தப் படத்தின் முன்னோட்டத்தை (டிரைலர்) 3 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

anjaan-2யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இப்படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ள அஞ்சான் படத்தின் முன்னோட்டம் (ட்ரைலர்) இன்று 8-ம் தேதி வெளியிடப்படுகிறது.

#TamilSchoolmychoice

“சன் மியூசிக்” தொலைக்காட்சியில் இந்த முன்னோட்டம் வெளியிடப்படுகிறது. அன்றே தமிழகம் முழுவதும் திரையரங்குகளிலும் முன்னோட்டம் (ட்ரைலர்) திரையிடப்படும்.

anjanபடம் வெளியாகும் தினத்துக்கு ஒரு நாள் முன்பாக, அஞ்சான் படத்தின் சிறப்புக் காட்சி மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் திரையிடப்படுகிறது.

படத்தின் நாயகன் சூர்யா, நாயகி சமந்தா, இயக்குநர் லிங்குசாமி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த காட்சியில் பங்கேற்கின்றனர்.