தமிழகம் மட்டுமல்ல அமெரிக்காவிலும் நமீதாவின் ரசிகர்கள் அநேகம்பேர் உள்ளனர் என்பதை சொல்லாமல் சொல்லியது ‘மெகா ஸ்டார்’ நிகழ்ச்சி.
ஜுலை 11-ம் தேதி மாலை 6.30 மணிக்கு அட்லாண்டாவிலும், ஜுலை 13-ம் தேதி சன் ஜோன்ஸிலும், ஜுலை 20-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸிலும் தமிழ் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட ‘தமிழ் மெகா ஸ்டார் கொண்டாட்டம்’ என்ற மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நடிகை நமீதா, நடிகர் நெப்போலியன், சின்னத்திரைப் புகழ் ரோபோ ஷங்கர் போன்றோர் கலந்து கொண்டு அமெரிக்க வாழ் ரசிகர்களை மகிழ்வித்தனர்.
தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க டிடி, அப்படியே தன்னுடைய தேனிலவு சுற்றுலாவையும் (ஹனிமூன்) திட்டமிட்டிருந்தார்.
சின்னத்திரை நட்சத்திரங்கள் உயிரைக் கொடுத்து நடனமாட, மேடையில் அலங்கார அணிவகுப்பு (கேட் வாக்) சென்று ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்கிவிட்டாராம் நமீதா.