பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 8 – கடந்த ஜுலை 17-ம் தேதி, ஆம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூரை நோக்கி வந்த மலேசியா ஏர்லைஸ் எம்எச்17 விமானம், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்டது.
இதில் விமானத்தில் பயணம் செய்த 283 பயணிகள் மற்றும் 15 விமானப் பணியாளர்கள் உயிரிழந்தனர்.
கடந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு, இப்போது தான் அதில் பயணம் செய்த மலேசியப் பயணி ஒருவரின் சடலம்அடையாளம் காணப்பட்டுள்ளது.
பினாங்கு மாநிலத்தை சேர்ந்த எலின் தியோ (வயது 27) என்ற பெண்ணின் சடலத்தை நெதர்லாந்தின் தடவியல் நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளனர். தடவியல் நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ள முதல் மலேசியப் பயணி ஆவார்.
தியோவின் பெற்றோருக்கு பிரதிநிதியை அனுப்பி தகவல் தெரிவிக்கப்படும் என்று காவல்துறையும், மாஸ் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
தியோவும் மாஹ்லரும் ஆஸ்திரேலியா மெல்போர்னில் நிதி துறையில் வேலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் விடுமுறைக்கு மலேசியா வருவதற்காக ஆம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு எம்எச்17-ல் பயணம் செய்துள்ளனர்.
தியோவின் நெருங்கிய நண்பனான டான் சோக் தேங்,ஜூலை 18 -ம் தேதி அவர்களை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து அழைத்து வர தயாராக இருந்தார். இந்நிலையில், எம்எச்17 விமானம் உக்ரைன் அருகே கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.