வாஷிங்டன், ஆகஸ்ட் 9 – ஈராக்கில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க இராணுவ உதவிகளைச் அளிக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக அதிபர் ஒபாமா தெரவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
“வடக்கு ஈராக்கில் தனி நாடு கேட்டு துப்பாக்கிச் சூடு, வெடி குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு அழிவுகளை ஏற்படுத்து சன்னி இஸ்லாமிய போராளிகளால் பொது மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
மக்களை பாதுகாக்க ஈராக் விரும்பினால், அவர்களுக்கு இராணுவ உதவி அளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது” “மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக போராடும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கவும் அமெரிக்கா தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று ஈராக்கி்ன் எர்பில் நகரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது, அமெரிக்க இராணுவ விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளன.