Home உலகம் அமெரிக்காவுடனான உறவை இந்தியா விரைவில் தீர்மானிக்கும்: அமெரிக்க அமைச்சர் சக் ஹேகல்!

அமெரிக்காவுடனான உறவை இந்தியா விரைவில் தீர்மானிக்கும்: அமெரிக்க அமைச்சர் சக் ஹேகல்!

487
0
SHARE
Ad

American-dominance-can-no-longerவாஷிங்டன், ஆகஸ்ட் 9 – அமெரிக்காவுடனான உறவை இந்தியா தீர்மானிக்கும் வரை, ஒபாமா அரசு காத்திருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார். இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் உரிமை பற்றி பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியதாவது:-

அணி சேரா நாடுகளில் தனித்துவத்தை பெற்ற நாடு இந்தியா. ஜனநாயகம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் தனிப்பட்ட சுதந்திர உணர்வுகளைக் கொண்டுள்ளது. அதனை அமெரிக்க அரசும் புரிந்து வைத்துள்ளது.”

#TamilSchoolmychoice

“இந்தியாவின் ஜனநாயகம் குறித்த யதார்த்தத்தை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். இந்திய அரசு மட்டுமின்றி இதுபோன்ற ஜனநாயகமுள்ள எந்த நாட்டின் அரசும் ஒரு விஷயத்தில் தனது முடிவை எடுக்க, போதுமான கால அவகாசம் தேவை”

US Defence Secretary, Chuck Hagel in New Delhi“தங்களது நாட்டு மக்களின் உணர்வுகள் மட்டுமல்லாது, காலத்திற்கு ஏற்ப வெளிநாட்டு உறவு திட்டங்கள் சிறப்பாக அமைத்துக் கொள்ள இந்தியா முயற்சிக் கின்றது. அதனால் இந்தியா, அமெரிக்காவுடனான தனது நிலைப்பாட்டை வரையறுக்கும் வரையில் ஒபாமா அரசு காத்திருக்கும்” என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த ஆட்சி காலத்தில் முழுமை அடையாமல் இருக்கும் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விரைவில் முடிவு கிடைக்க அமெரிகா பெரும் முயற்சிகள் எடுத்து வருகின்றது. அதன் காரணமாக அந்நாட்டின் முக்கிய அமைச்சர்கள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.