சென்னை, ஆகஸ்ட் 9 – தமிழ் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்காத நயன்தாரா, ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் சிம்பு, ஆர்யாவுடன் இணைந்து நிறைய வதந்திகள் வருகின்றதே அவைகள் உண்மையா? வதந்தியா? என் கேட்டனர்.
அதற்கு நயன்தாரா கூறியதாவது, “என்னை பற்றி நிறைய வதந்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் அதில் எதிலும் துளிகூட உண்மையில்லை. இந்தி நடிகர்கள் இப்படி வதந்திகள் பரவ வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.
இதன் மூலம் தங்களுக்கு விளம்பரம் கிடைப்பதாக கருதுகின்றனர். ஆனால் அந்த கிசுகிசுகளுக்கு அவர்கள் பதில் சொல்வதேயில்லை. தமிழ் திரையுலகிலும் இது போன்ற மோசமான நிலை நீடிக்கின்றது.
#TamilSchoolmychoice
ஆனால் தெலுங்கு நடிகர்கள் இந்தி மற்றும் தமிழ் நடிகர்களை போல மோசமானவர்கள் கிடையாது. தெலுங்கு நடிகர்கள் கிசுகிசுக்கள் ஏதாவது வந்தால் உடனே அதற்கு மறுப்போ, விளக்கமோ கொடுத்து விடுவர்” என்று கூறினார்.
தமிழ் படங்களின் அதிக சம்பளம் வாங்கிக்கொண்டு நடித்து வரும் நயன்தாரா தமிழ் நடிகர்களை அவமானப்படுத்தி பேசியது குறித்து திரைப்பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்