Home கலை உலகம் கத்தி படத்தின் கதை கசிந்தது! படக்குழு அதிர்ச்சி!

கத்தி படத்தின் கதை கசிந்தது! படக்குழு அதிர்ச்சி!

664
0
SHARE
Ad

kathiசென்னை, ஆகஸ்ட் 9 – முன்னனி கதாநாயகர்கள் படம் என்றால் மக்களுக்காக போராட வேண்டும். அப்படி தான் தமிழ் சினிமாவில் படங்களை பார்த்து வருகிறோம்.

துப்பாக்கி படக்குழுவினர் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி மக்களைக் காக்கும் ஒரு ராணுவ வீரரின் கதையைச் சொல்லி வெற்றிப் படமாக்கினர்.

kaththiஇப்போது ‘கத்தி’ படம் ஒரு பன்னாட்டு குளிர்பான தொழிற்சாலையை எதிர்த்து விஜய் போராடுவது போன்ற கதை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த தொழில்சாலையால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

#TamilSchoolmychoice

இந்த மக்களுக்காக விஜய் களத்தில் இறங்கி போராடுகிறார். மக்களுக்காக போராடும் விஜய் திடீரென காணாமல் போய் விடுகிறார். அப்போது வேறு ஒரு விஜய்யைப் பார்க்கும் மக்கள், இவர்தான் அவர் என நினைத்து இந்த விஜய்யை அழைத்து வந்து போராட்டத்தை மீண்டும் நடத்துகிறார்கள்.

vijayaபின் இரண்டு விஜய்யும் சந்திக்கிறார்களா? இல்லை இருவரும் மோதிக் கொள்கிறார்களா என்பது கதையாம். இதை அறிந்த படக்குழு மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனராம்.