Home நாடு ஞாயிறு காலை மின்னல் வானொலியில் சீனி நைனா முகம்மதுவுக்கு அஞ்சலி நிகழ்ச்சி

ஞாயிறு காலை மின்னல் வானொலியில் சீனி நைனா முகம்மதுவுக்கு அஞ்சலி நிகழ்ச்சி

2645
0
SHARE
Ad

Seeni Naina Mohdகோலாலம்பூர், ஆகஸ்ட் 9 – வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11.00 மணியளவில் தமிழ் இலக்கிய படைப்பாக ஒலிபரப்பாகும்  நிகழ்ச்சி ‘அமுதே தமிழே’. தமிழ் இலக்கிய ஆர்வலர்களை பெரிதும் கவர்ந்த நிகழ்ச்சி இதுவாகும்.

கடந்த காலங்களில், அண்மையில் மறைந்த தமிழறிஞர் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள் இந்த நிகழ்ச்சியில் வழங்கிய பல்வேறு உரைகள், அவரது ‘தொல்காப்பியம்’ குறித்த விளக்க உரைகள் பெருமளவில் வானொலி இரசிகர்களை ஈர்த்தன. அதன் வழி சீனி நைனா முகம்மதுவுக்கும் ஒரு வாசகர் வட்டம் உருவாகியது என்பதோடு, அவரது விளக்க உரைகள் மூலம் தொல்காப்பியம் குறித்த விழிப்புணர்வும் தமிழ் ஆர்வலர்களிடையே ஏற்பட்டது.

Minnal FMமறைந்த கவிஞர் சீனி நைனா முகம்மதுவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை  காலை 11.00 மணியளவில் மின்னல் பண்பலையில் மலரும் ‘அமுதே தமிழே’ அவருக்குரிய சிறப்பு நிகழ்ச்சியாக மலர்கின்றது.

#TamilSchoolmychoice

பிரபல வானொலி அறிவிப்பாளர் பொன் கோகிலத்தின் தயாரிப்பில் மலரும் இந்த நிகழ்ச்சியில்  மறைந்த சீனி நைனா முகம்மது அவர்கள் குறித்த தகவல்களும், அவரது தமிழ்ப்பணி மற்றும் சிறப்பியல்கள் குறித்து மலேசியாவிலிருந்தும், மற்ற உலக நாடுகளிலிருந்தும் தமிழ் ஆர்வலர்களும், அறிஞர்களும் கூறியுள்ள கருத்துக்களும் இடம் பெறும்.

செவிமெடுக்க  மறவாதீர்கள்!

மின்னல் பண்பலையின் நிகழ்ச்சிகளை கீழ்காணும் இணைப்பின் வழியாகக் கேட்டு மகிழலாம்:

http://cdn.stream.my/player/playback.php?channel=rtm-ch015&quality=auto

http://www.liveonlineradio.net/malaysia/minnal-fm.htm