Home உலகம் தெஹரானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது – அனைத்து 48 பயணிகளும் மரணம்!

தெஹரானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது – அனைத்து 48 பயணிகளும் மரணம்!

591
0
SHARE
Ad

 Officials and relatives of victims stand at the crash site of a passenger airplane in Tehran, Iran, 10 August 2014. At least 40 passengers on an Iranian passenger jet were reported dead after it crashed shortly after take-off near Tehran's airport, the Irna news agency reported, citing the Iran Red Crescent Society. The plane was departing Tehran's Mehrabad airport on its way to Tabas, in the country's east. தெஹரான், ஆகஸ்ட் 10 – இன்று ஞாயிற்றுக்கிழமை ஈரானின் தெஹரான் நகரிலுள்ள மெஹ்ராபாட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 48 பேரும் கொல்லப்பட்டனர்.

அவர்களின் 6 குழந்தைகள் உள்ளிட்ட 40 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களும் அடங்குவர்.

காலை 9.18 மணியளவில் செபாஹான் ஏர்லைன்ஸ் (Sepahan Airlines) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம் மத்திய தெஹரானின் மேற்கிலுள்ள அசாடி மக்கள் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

#TamilSchoolmychoice

தாபாஸ் (Tabas) என்ற கிழக்கு நகரை நோக்கி அந்த விமானம் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து நேர்ந்தது.

 Iranian police officers and soldiers inspect the tail of a crashed airplane in Tehran, Iran, 10 August 2014. At least 40 passengers on an Iranian passenger jet were reported dead after it crashed shortly after take-off near Tehran's airport, the Irna news agency reported, citing the Iran Red Crescent Society. The plane was departing Tehran's Mehrabad airport on its way to Tabas, in the country's east.

(மேலும் செய்திகள் தொடரும்)