Home உலகம் சிங்கப்பூரின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் – பிரதமர் லீ சியான் லூங்!

சிங்கப்பூரின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் – பிரதமர் லீ சியான் லூங்!

637
0
SHARE
Ad

singapore_pmசிங்கப்பூர், ஆகஸ்ட் 11 – சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விரைவில் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என அந்நாட்டின் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை 49-வது தேசிய தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தேசிய தினத்தை முன்னிட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள பிரதமர் லீ சியான் லூங், சிறிது தொய்வை சந்தித்துள்ள ‘மொத்த உள்நாட்டு உற்பத்தி’ (Gross Domestic Product) விரைவில் வளர்ச்சியை எட்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.5 சதவீதமாக  உயர்ந்துள்ளது. அடுத்த 10 வருடங்களில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, நாம் நமது வளர்ச்சியை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான திட்டங்களையும், வழிமுறைகளையும் நாம் உடனடியாக செயல்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஆய்வு செய்யும் ‘ப்ளூம்பேர்க்’ (Bloomberg) நாளிதழின் கணக்கீட்டுப் படி, “சிங்கப்பூரின் வருடாந்திர உள்நாட்டு உற்பத்தி கடந்த ஜூன் மாதத்தின் போது 0.1 சதவீதம் குறைந்துள்ளதாகவும். இரண்டாம் பாதியீல் அதன் வளர்ச்சி 1.5 முதல் 3.5க்குள் இருக்கும்” என்று அறிவித்துள்ளது.