Home கலை உலகம் பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை!

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் தற்கொலை!

614
0
SHARE
Ad

Robin williamsலாஸ்ஏஞ்சல்ஸ், ஆகஸ்ட் 12 – ஹாலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகரும், மூன்று முறை ஆஸ்கார் விருதை வென்றவருமான ராபின் வில்லியம்ஸ் (வயது 63), கலிபோர்னியாவிலுள்ள அவரது வீட்டில் நேற்று பிணமாகக் கிடந்தார்.

கடந்த சில நாட்களாக அவர் மிகவும் மன உளைச்சலில் இருந்ததாகவும், எனவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

‘மிஸஸ் டவுட் ஃபயர்’ என்ற திரைப்படத்தில் ராபின் பெண் வேடமிட்டு மிக அற்புதமாக நடித்திருப்பார். தமிழில் வெளிவந்த ‘அவ்வை சண்முகி’ என்ற திரைப்படம் இதை அடிப்படையாக வைத்து தான் எடுக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

Robin williams 1

ராபினின் திடீர் மரணம் குறித்து அவரது மனைவி சூசன் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். தன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ராபினுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.