சென்னை, ஆகஸ்ட் 12 – ‘கத்தி’ படம் பற்றி கேள்வி எழுப்புவர்கள் மீது கடும் கோபத்துடன் சீறிப்பாய்கிறார் சீமான். நிருபர்கள் கத்தி படம் குறித்துப் பேசினால், விஜய்யும் முருகதாஸும் என் தம்பிங்க. கத்தி படத்தை எதிர்க்க முடியாது. என்னய்யா செய்ய முடியும்? என கேட்கிறார் சீமான்.
‘லைகா மொபைல்’ ராஜபக்சே கூட்டாளியாச்சே? என்ற கேள்விக்கு சீமான் பதில் கூறுகையில், “லைகாவுக்கு இந்தியாவில் அலுவலகமே இல்லை. லைகா லண்டனிலும் ஐரோப்பாவிலும் தான் இருக்கிறது.
ஒருவேளை ராஜபக்சே மருமகன் கூட அந்த நிறுவனத்துக்கு தொடர்பு இருந்தால் அந்த சேவையைப் பயன்படுத்தும் அங்குள்ள தமிழர்களை போராடச் சொல்லுங்கள். எதுக்காக என்னை சீண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறீர்கள்?
உண்மையில் இந்தியாவில் தமிழகத்தில் லைகா நிறுவனத்துக்கு அதிகாரப்பூர்வமாக அலுவலகம் உள்ளது. சென்னை அசோக் நகரில், 9-வது அவென்யூவில் அமைந்துள்ளது அந்த அலுவகம் என்று கூறியுள்ளார்.
லைகா நிறுவனத்துக்காக சீமான் கூட படம் பண்ணப் போகிறார் என்ற தகவலை, சீமான் அங்கத்தினராக உள்ள இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமனும், நிர்வாகி ஆர்கே செல்வமணியும் கூறியுள்ளனர்.
அதுவும் சாதாரணமாக சொல்லவில்லை. நூறு மீடியாக்காரர்களைக் கூட்டி வைத்து அறிவித்தார்கள். அதனை சீமான் அப்போது மறுக்கவில்லை.
ஆனால் இப்போது மறுக்க ஆரம்பித்துள்ளார். விமர்சனங்கள் படுகாட்டமாக வரத் தொடங்கிய பிறகு, என் படம் பற்றி அவர்கள் எப்படி அறிவிக்கலாம் என்று இப்போதுதான் கேட்கிறார் சீமான்.