Home உலகம் ஐ.நா. விசாரணையை இலங்கையிடம் தெரிவிக்காமல் நடத்த முடியும் – நவநீதம் பிள்ளை!

ஐ.நா. விசாரணையை இலங்கையிடம் தெரிவிக்காமல் நடத்த முடியும் – நவநீதம் பிள்ளை!

520
0
SHARE
Ad

human-right-overwhelmed-in-syrநியூயார்க், ஆகஸ்ட் 12 – மனித உரிமை மீறல் குறித்த விசாரணைக்கு இலங்கையின் அனுமதி தேவை இல்லை. இலங்கையிடம் தெரிவிக்காமலே விசாரணையை நடத்த வாய்ப்புள்ளது என ஐ.நா. மனித உரிமை ஆணையக்குழு தலைவரான நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும், சரண் அடைந்த போராளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலரை இலங்கை இராணுவம் சித்தரவதை செய்ததாகவும் உலக அளவில் இலங்கையின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை விசாரிக்க ஐ.நா. 12 பேர் கொண்ட குழுவை அமைத்தது. எனினும் இக்குழுவிற்கு அனுமதி அளிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது. இலங்கையின் இத்தகைய செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக்குழு தலைவரான நவி பிள்ளை,

#TamilSchoolmychoice

Navi_Pillay“இலங்கையிடம் எத்தகைய அனுமதியும் கோராமல், ஐ.நா விசாரணைக் குழு தனது விசாரணையை நடத்தி முடிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு யார் காரணம் என்ற உண்மை அனைவருக்கும் தெரிய வேண்டும்.

மக்களின் நலன் கருதியும், அமைதி மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை சிறந்த முறையில் நடத்தவும் இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.