Home 13வது பொதுத் தேர்தல் சபாவில் மேலும் இரண்டு பிரமுகர்கள் வேறு கட்சிக்கு மாறினர்!

சபாவில் மேலும் இரண்டு பிரமுகர்கள் வேறு கட்சிக்கு மாறினர்!

576
0
SHARE
Ad

sabah-flagசபா, பிப்.21- சபாவில் கடந்த வாரம் மேலும் இரண்டு பிஎன் பிரமுகர்கள் பிகேஆர் கட்சியில் சேர்ந்தனர்.

கடந்த சில மாதங்களாக பிஎன் பிரமுகர்கள் பலர் கட்சி மாறி வருகின்றனர்.

முன்னாள் சபா துணை அமைச்சர் யாப்பின் ஜிம்போட்டோன், முன்னாள் கூட்டரசுத் துணை அமைச்சர் அகமட் ஷா தம்பாக்காவ் ஆகியோர் பிகேஆர்  கட்சியில் சேர்ந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இவ்விருவரும் பெர்ஜெயா கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனப் புத்தாண்டின் முதல் நாளான பிப்ரவரி 10ம்  தேதி பிகேஆர்  கட்சியின் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சபாவுக்குச் சென்றிருந்த போது அவ்விருவரும் அதிகாரப்பூர்வமாக பிகேஆர்   கட்சிக்கு  மாறினர்.