Home அரசியல் ஜுய் மெங்கை வான் அஜிஸா ஆதரிக்கிறார்

ஜுய் மெங்கை வான் அஜிஸா ஆதரிக்கிறார்

655
0
SHARE
Ad

suvaaஜொகூர், பிப்.21- பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில்  ஜோகூர் மாநிலத் தலைவர் சுவா ஜுய் மெங் (படம்) -கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் பிகேஆர், மற்றும் டிஏபி கட்சிகளுக்கு இடையிலான இட ஒதுக்கீடு தகராற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ்-வை  வன்மையாக கண்டித்துள்ளார்.

வான் அஜிஸா வெளியிட்டுள்ள நான்கு பத்திரிக்கையில் பூ-வின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் சுவாவுக்கு எதிராக திங்கட்கிழமை பூ வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டதை அவர் மேலும் குறிப்பிட்டார்.

எனவே, தமது சொந்த நலனுக்காக சுவா ஜோகூரில் பிகேஆர் மற்றும் டிஏபி உறவுகளை சீர்குலைத்து வருவதாக ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் பூ -வின் அறிக்கையை  வெளியிட்டதை தொடர்ந்து, அவர் இனிமேல் அறிக்கைகள் வெளியிடக் கூடாது என லிம் கடந்த செவ்வாய்க் கிழமை உத்தரவிட்டார்.

#TamilSchoolmychoice

ஜோகூர் மாநிலத்தில் அரசியல் வடிவமைப்பில் மூன்று பக்காத்தான் கட்சிகளும் பெரிய அளவில் செல்வாக்கை வளர்த்துக் கொண்டுள்ளதைச் சுட்டிக் காட்டிய அவர், பல முக்கியமான பிரச்சனைகளில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.