Home நாடு மலேசியாவில் பிரபல பாப் பாடகி மரியா கேரியின் மாபெரும் இசை நிகழ்ச்சி!

மலேசியாவில் பிரபல பாப் பாடகி மரியா கேரியின் மாபெரும் இசை நிகழ்ச்சி!

668
0
SHARE
Ad

US singer Mariah Carey performs during the World Music Awards 2014 held at the Sporting Club, in Monte Carlo, Monaco, 27 May 2014. கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – புகழ்பெற்ற அமெரிக்க பாப் பாடகி மரியா கேரி எதிர்வரும் அக்டோபர் மாதம் 22-ம் தேதி, இரவு 8 மணிக்கு, கோலாலம்பூரிலுள்ள மெர்டேக்கா சதுக்கத்தில் நேரடியாக ரசிகர்கள் முன் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.

இது குறித்து ஐஎம்இ புரொடக்‌சன்ஸ் என்ற விளம்பர நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈடு இணையற்ற அமெரிக்க பாப் பாடகி அவரது மிக வெற்றியடைந்த பாடல்களை ரசிகர்களுக்காக நேரடியாகப் பாடி ரசிகர்களை அன்பு மழையில் நனைக்கவுள்ளார். மலேசிய ரசிகர்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

US singer Mariah Carey performs during the World Music Awards 2014 held at the Sporting Club, in Monte Carlo, Monaco, 27 May 2014.

#TamilSchoolmychoice

ஆகஸ்ட் 17 -ம் தேதி தொடக்கம், சிலாங்கூரிலுள்ள பேரடிம் மாலில் இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டு வழங்கப்படவுள்ளது. 120 ரிங்கிட் தொடங்கி 680 ரிங்கிட் வரை தரவாரியாக அனுமதிச் சீட்டின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் முன்பதிவு செய்பவர்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

US singer Mariah Carey performs during the World Music Awards 2014 held at the Sporting Club, in Monte Carlo, Monaco, 27 May 2014.

ஆகஸ்ட் 18 முதல் www.ticketcharge.com.my வழியாக அனுமதிச் சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் விபரங்களுக்கு கீழ்காணும் தொலைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

ஐஎம்இ புரொடக்சன்ஸ் – 03-92228811 அல்லது 011-23166198