Home கலை உலகம் ராபின் வில்லியம்ஸின் மரணம் தற்கொலையே – காவல்துறை உறுதி!

ராபின் வில்லியம்ஸின் மரணம் தற்கொலையே – காவல்துறை உறுதி!

571
0
SHARE
Ad

williamsஅமெரிக்கா, ஆகஸ்ட் 13 – பிரபல ஹாலிவூட் நடிகர் ராபின் வில்லியம்ஸின் மரணம் தற்கொலை தான் என அமெரிக்க காவல்துறையினர் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

63 வயதான அமெரிக்க நடிகர் ராபின் வில்லியம்ஸ் நேற்று தனது கலிபோர்னிய வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். மன உளைச்சல், மன விரக்தி ஆகியவற்றை கட்டுப்படுத்த சமீபகாலமாக மருந்துகள் உபயோகித்துவந்த அவர், நேற்று இடைவார் (பெல்ட்) மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதோடு அவரது இடது கை மணிக்கட்டில் கத்தி ஒன்றினால் வெட்டுக் காயம் ஏற்படுத்தப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டது உறுதியானது.

#TamilSchoolmychoice

robin-williamsமேலும், கடந்த சில மாதங்களாக அல்ககோல், கொக்கேன் போன்ற போதை வஸ்துக்களுக்கு அடிமையாகியிருந்த அவர், மன உளைச்சலைக் கட்டுப்படுத்த மீள் நிவாரண முகாம் ஒன்றிலும் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார் என்று  அமெரிக்க காவல்துறையினர் தெரிவித்தனர்.