Home இந்தியா 68-வது சுதந்திர தின விழா: டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

68-வது சுதந்திர தின விழா: டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

546
0
SHARE
Ad

red fortடெல்லி, ஆகஸ்ட் 13 – இந்தியா சுதந்திரமடைந்து வரும் வெள்ளிக்கிழமையோடு 67 வருடங்கள் முடிவடைகிறது. எனவே, 68-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நாடுமுழுவதும் நடந்து வருகின்றன.

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இந்தியா முழுவதும் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு விமானங்களைக் கடத்தப் போவதாக விடுத்துள்ள மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

red-fort45வரும் வெள்ளியன்று நாடு முழுவதும் 68-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. மத்தியில் பாஜக அரசு பதவியேற்றதற்குப் பின் வரும் முதல் சுதந்திர தினம் என்பதால், மத்திய அரசு டெல்லி சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களைச் சீர்குலைக்கும் வகையில் நாசவேலைகள் நடைபெறலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேசியக் கொடித் தயாரிப்பு, கலைநிகழ்ச்சிகள், பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்தும் முன் கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தப் பட்டு வருகின்றன. பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் மற்ற இடங்களைக் காட்டிலும் தலைநகர் டெல்லியில் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் படு விமர்சையாக நடந்து வருகின்றன. காரணம் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைத்ததும் கொண்டாட இருக்கின்ற முதல் சுதந்திர தின விழா இது.