Home உலகம் பிரேசில் அதிபர் வேட்பாளர் விமான விபத்தில் மரணம்!

பிரேசில் அதிபர் வேட்பாளர் விமான விபத்தில் மரணம்!

534
0
SHARE
Ad

presidential hopefulபிரேசில், ஆகஸ்ட் 14 – பிரேசில் அதிபர் வேட்பாளர் விமான விபத்தில் உயிரிழந்தார். பிரேசில் பெர்னம்புகோ மாநில முன்னாள் கவர்னர் எடுவர்டோ கேம்போசு பிரேசிலன் சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரேசிலில் வரும் அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் சிறிய விமானம் மூலம் எடுவர்டோ கேம்போசு ஆதரவாளர்களுடன் பிரச்சாரத்திற்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கேம்போசு, விமானி உள்பட அதில் பயணம் செய்த 7 பேரும் பலியாகினர்.

#TamilSchoolmychoice

கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதனால் தரையிறங்க முயன்ற விமான தரையிறக்கப்படவில்லை. விமானம் அப்பகுதியில் இருந்த வீடுகள் மீது விழுந்துள்ளது. இதில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. விமானம் விபத்துக்குள் சிக்கியது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.