கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – தனது சேவைகளின் தரத்தை பல முனைகளிலும் மேம்படுத்தி வரும் ஏர் ஆசியா நிறுவனம், தனது விமான சேவைகளில் கூடுதல் வசதிகளை எதிர்பார்க்கும் பயணிகள், குறிப்பாக வணிகர்களான பயணிகளுக்காக ‘பிரிமியம் பிளக்ஸ்’ (Premium Flex) என்ற பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏர் ஆசியா குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்ணான்டஸ் பிரிமியம் பிளக்ஸ் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி கோலாலம்பூரில் அறிமுகப்படுத்தி உரையாற்றுகின்றார்.
பிரிமியம் பிளக்ஸ் திட்டத்தின் மூலம் பயணத்தில் ஈடுபடுபவர்கள் 20 கிலோ எடையுள்ள பயணப் பெட்டிகள் அல்லது பொருட்களை உடன் கொண்டு செல்வது, விமானப் பயணத்திற்கான நேரத்தை கூடுதல் கட்டணமின்றி முன்கூட்டியே மாற்றுவது போன்ற சில கூடுதல் வசதிகளைப் பெற முடியும்.