Home இந்தியா மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மருத்துவமனையில் அனுமதி!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மருத்துவமனையில் அனுமதி!

750
0
SHARE
Ad

rajnath singh,டெல்லி, ஆகஸ்ட் 14 – மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று இரவு 8:30 மணி அளவில் ‘திடீர்’ உடல்நலக்குறைவால் ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். ராஜ்நாத் சிங் இரைப்பை, குடல் துறை பிரிவு கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங்குக்கு பரிசோதனைகள் சில செய்ய வேண்டியதுள்ளது. எனவே அவர் இன்று காலைவரையில் மருத்துவமனையில் தங்கியிருக்கும்படி மருத்துவர்கள் கூறினார்கள்.