இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு நிலை பெறாமல் இருந்து வரும் தருணத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் குறித்து வெளியிட்ட கருத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து இரு தரப்பும் அடுத்தடுத்து கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், இரு நாட்டு உறவும் வலுவிழந்து வருகின்றது. இந்நிலையில், இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“இரு நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக இருந்து வரும் காஷ்மீர் பிரச்சினையில் அமைதிப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணவே நாங்கள் விரும்புகின்றோம். இது மிக நேர்மையான முறையில் எடுக்கப்பட்ட முடிவாகும்.
“எங்கள் நாட்டில் அமைதியை நிலவ முயற்சி செய்கின்றோம். எல்லைகளிலும் அமைதி நீடிக்க வேண்டும் என்பதே எங்கள் அடிப்படை நோக்கமாகும்” என்று அவர் கூறியுள்ளார்.