Home இந்தியா சுதந்திர தினம்: பிரதமர் மோடிக்கு நவாஸ்செரீப் வாழ்த்து!

சுதந்திர தினம்: பிரதமர் மோடிக்கு நவாஸ்செரீப் வாழ்த்து!

593
0
SHARE
Ad

modiபுதுடெல்லி, ஆகஸ்ட் 16 – இந்திய சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் வாழ்த்து தெரிவித்தார். இந்திய மக்களுக்கு தமது சுதந்திரதின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் நடந்த பாகிஸ்தான் சுதந்திரதின விழாவுக்கு, பிரதமர் மோடி அந்த நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதற்கு முன்னதாக எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபடுவதை கண்டித்து மோடி பேசுகையில், பாகிஸ்தான் மறைமுகப்போரில் ஈடுபடுவதாக சாடினார்.

இதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை, மோடியின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும் தீவிரவாதம் ஆழ்ந்த கவலை அளிக்கிறது என்றும் தெரிவித்தது.