Home நாடு நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆலய மாநாடு

நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆலய மாநாடு

822
0
SHARE
Ad

malaysia-hindhu-sangamநெகிரி செம்பிலான், பிப்.21- தற்போது மலேசிய இந்து சங்க  தேசிய பேரவையின் ஆலயப் பிரிவு மாநில அளவிலான ஆலய மாநாட்டை ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்தி வருகிறது.

அவ்வரிசையில், வரும் 23.2.2013 சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணி முதல் இரவு 7 மணி வரை சிரம்பான் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மலேசிய இந்து சங்க நெகிரி செம்பிலான் மாநில பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த ஆலய மாநாட்டிற்கு, மாநில தலைவரும் தேசியத் துணை தலைவருமான வே.கந்தசாமி தலைமை தாங்குவார்.

#TamilSchoolmychoice

இம்மாநாட்டை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் திறந்து வைக்கவுள்ளார்.

மேலும், தேசியத் தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் ஆலயம் தொடர்பான கொள்கைகளைப் பற்றி உரையாற்றுவார்.

தொடர்ந்து, இம்மாநாட்டில் கலந்துக் கொள்ளும் அனைத்து ஆலயங்களுக்கும் மலேசிய இந்து சங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ள ஆலய கையேடு இலவசமாக வழங்கப்படும்.

ஆலயத்தைப் பிரதிநிதிக்கும் பேராளர்கள், பிரமுகர்கள் பாராம்பரிய உடையில் இம்மாநாட்டில் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கப்படுகிறார்கள்.

மேல் விவரஙகளுக்கு அ.சுந்தரம் 010-2749505, மற்றும் மாநிலச் செயலாளர் இல.இள முருகன் 017-6960246 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்