Home உலகம் 2880-ல் ராட்சத விண்கற்ளால் பூமிக்கு அழிவு!

2880-ல் ராட்சத விண்கற்ளால் பூமிக்கு அழிவு!

853
0
SHARE
Ad

Space-Elevatorsநியூயார்க், ஆகஸ்ட் 18 –  வரும் 2880–ம் ஆண்டில் பூமியை விண்கல் ஒன்று தாக்கி அழித்துவிடும் என வானவியல் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

உலகம் எப்போது அழியும் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எட்டிப் பார்ப்பது வாடிக்கை. உலகத்தின் அழிவு பற்றியும் அதன் மூலம் மனித இனத்தின் இறப்பு பற்றியும் போலிகள் அவ்வபோது கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுவதும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.

இந்நிலையில் வருகிற 2880 ஆண்டில் உலகம் முற்றிலும் அழிந்து விடும் என அமெரிக்க விஞ்ஞானிகள் ஆரூடங்களைக் கூறியுள்ளனர். அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள், சமீபத்தில் விண்கல் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

#TamilSchoolmychoice

அந்த ஆய்வு குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “4,800 மெகாடன் எடை கொண்ட மிகப்பெரும் விண்கல் ஒன்று பூமியை நோக்கி மணிக்கு 38 ஆயிரம் மைல் என்ற வேகத்தில் சுழன்றபடி பாய்ந்து வருவகின்றது.

boomiஅது பூமியை வந்து தாக்கும் பொழுது தட்ப வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு சுனாமி உள்ளிட்ட பேரழிவுகள் ஏற்படும்” என்று கூறியுள்ளனர். எனினும் அந்த விண்கல் பூமியை மோதுவதில் 300 –ல் ஒரு பங்கு வாய்ப்பே உள்ளதாக மற்றொரு தரப்பு விஞ்ஞானிகளால் கூறுகின்றனர்.

1950 டி,ஏ எனப் பெயரிட்டுள்ள இந்த விண்கல் பூமியில் அழிவை ஏற்படுத்துமா அல்லது அப்போதைய காலத்தில் பெரும் வளர்ச்சியை அடைந்து விடும் அறிவியல் அந்த விண்கல்லை பூமியில் மோதாமல் காக்குமா என்பது போன்ற விவாதங்கள் வலைதளங்களில் இப்போதே தொடங்கி விட்டன.