அங்குள்ள பலுபங், பைரவா உள்ளிட்ட அணைகள் நிரம்பி, நேபாள எல்லையில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் 7 மாவட்டங்களில் வெள்ளம் புகுந்தது. நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழையால் வெள்ளம் புகுந்தது.
மேலும், இமாலய பகுதியில் உள்ள ஆறுகள் நிரம்பி ஓடுவதால், உத்தரப் பிரதேசத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 300 பேரை காணவில்லை என பஹ்ரைச், கேரி மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சரயு அணையில் நீர்மட்டம் உச்சத்தை எட்டியது. இதையடுத்து, அணை திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வெள்ள பாதிப்பு உள்ள இடங்களில் ஹெலிகாப்டர் மூலம், உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தால், துத்வா, சுகேல்வா ஆகிய சரணாலயங்கள் பாதிக்கப்படலாம் என தெரிகிறது. இவற்றில் புலிகள், சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.