Home நாடு மிகச் சரியான பாதையில் நாட்டின் பொருளாதாரம் – நஜிப் அறிவிப்பு

மிகச் சரியான பாதையில் நாட்டின் பொருளாதாரம் – நஜிப் அறிவிப்பு

546
0
SHARE
Ad

Najib Malaysiaகோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – நாட்டின் பொருளாதாரம் மிகச் சரியான தளத்தில் பயணிப்பதாக  பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் நேற்று மலேசிய தொழில்முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் நஜிப், அவ்விழாவினைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது நாட்டின் வளர்ச்சி குறித்தும், வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் குறித்தும் அவர் கூறியதாவது:-

“இந்த வருடத்தின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 0.2சதவீதம் அதிகரித்து, 6.4 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாகும்”

#TamilSchoolmychoice

“பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள இந்த பெரும் வளர்ச்சிக்கு முக்கிய காரணம், நாட்டின் ஏற்றுமதி உச்சத்தை அடைந்துள்ளது தான். கடந்த காலாண்டில் 10.8 சதவீதமாக இருந்த ஏற்றுமதி வளர்ச்சி, தற்போதய காலாண்டில் 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி அதிகரிப்பைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரமும் உயர்ந்துள்ளது.”

“இந்த  வளர்ச்சி நாம் சரியான தளத்தில் தான் பயணம் செய்கின்றோம் என்பதை உணர்த்துகின்றது” என்று கூறியுள்ளார்.

ஐந்து மாத இடைவெளிகளில் எம்எச் 370 மற்றும் எம்எச் 17 ஆகிய இருபெரும் விமானப் பேரிடர்களை சந்தித்த மலேசியா , பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் உட்பட சில துறைகளில் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என வர்த்தகர்கள் ஆருடங்கள் கூறிய நிலையில், தனது பொருளாதார ஆளுமையை மலேசியா வெற்றிகரமாக நிரூபித்துக் காட்டி உள்ளது.