Home உலகம் இந்தியா பாகிஸ்தான் இடையேயான வெளியுறவு பேச்சுவார்த்தை ரத்து!

இந்தியா பாகிஸ்தான் இடையேயான வெளியுறவு பேச்சுவார்த்தை ரத்து!

799
0
SHARE
Ad

India,புதுடெல்லி, ஆகஸ்ட் 19 – இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் வெளியுறவுத் துறை  செயலாளர்கள் இடையே நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே இருந்து வரும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க, இரு நாட்டு வெளியுறவு செயலர்களுக்கான சந்திப்பு எதிர்வரும் 25-ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெற இருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் தூதர் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் தலைவர்களை நேரடியாகச் சந்தித்துள்ளாதால் இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

#TamilSchoolmychoice

மேலும், பாகிஸ்தான் இராணுவம்  இந்திய நிலைகள் மீது  தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகிப் போனதாலும் இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி சையது அக்பருதீன் கூறியிருப்பதாவது:- “இந்தியாவின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையீது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதனை பாகிஸ்தான் அடியோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்”  என்று அவர் கூறியுள்ளார்.