Home உலகம் அமெரிக்காவில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்!

அமெரிக்காவில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்!

437
0
SHARE
Ad

THSHK_TRAINS_COLLI_1460915fவாஷிங்டன், ஆகஸ்ட் 19 – அமெரிக்காவில் ரசாயனங்களை ஏற்றி வந்த 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் சரக்கு பெட்டிகள் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தன. விபத்தில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்காவில் அர்கான்சாஸ் மாநிலத்தின் வடகிழக்கே ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இருந்து நச்சு திரவ ரசாயனத்தை ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு சரக்கு ரயில் புறப்பட்டது.

அதே நேரம், மற்றொரு சரக்கு ரயில் கழிவு ரசாயனத்தை ஏற்றி கொண்டு அந்த தொழிற்சாலைக்குத் திரும்பி கொண்டிருந்தது. இந்த 2 சரக்கு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்ததால், ஹாக்சி என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

#TamilSchoolmychoice

ரயில்களின் மோதலை தொடர்ந்து, வேகன்களில் இருந்த நச்சு ரசாயனங்கள் கசிந்தன. இதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  இதுகுறித்து தகவல் அறிந்ததும் அர்கன்சாஸ் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்றனர்.

அப்பகுதியில் வசித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றினார்கள். பின்னர், சரக்கு ரயில்களில் இருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் சரக்கு ரயில்களில் இருந்த 2 ஊழியர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரே பாதையில் 2 சரக்கு ரயில்களும் வந்ததற்கான காரணம் பற்றி விசாரணை நடக்கிறது என்று அர்கன்சாஸ் போலீசார் தெரிவித்தனர்.