Home நாடு கோத்தா டாமன்சாரா விபத்து: எம்ஆர்டி நிறுவனத்தின் தலைவர் அஸார் அப்துல் ஹமீட் ராஜினாமா!

கோத்தா டாமன்சாரா விபத்து: எம்ஆர்டி நிறுவனத்தின் தலைவர் அஸார் அப்துல் ஹமீட் ராஜினாமா!

527
0
SHARE
Ad

MRT CEO

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 19 – கோத்தா டாமன்சாராவில் நேற்று இரவு விரைவு இரயில் (எம்ஆர்டி) கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் மூன்று வங்காள தேச தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இன்று நடைபெற்ற மீட்புப் பணியில் 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இந்த சம்பவத்தால், குறைந்தது இரண்டு வாரங்களுக்கு கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த விபத்திற்குப் பொறுப்பேற்று எம்ஆர்டி கார்பரேசன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அஸார் அப்துல் ஹமீட் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.